*நமது பாரதம்*
இந்தியா... எனது இந்தியா
இந்தியா... நமது இந்தியா
இமயமலை குமரிக்கடல்
எல்லை வரை இந்தியா
இந்து, முஸ்லிம், கிறிஸ்து
சேர்ந்து வாழும் நாடு இந்தியா
-அன்பைப் பொழியும் இந்தியா
-பண்பில் சிறந்த இந்தியா
-பாரதமாய் பேரு பெற்று
-பார் புகழும் இந்தியா
இந்தியா... எனது இந்தியா
இந்தியா... நமது இந்தியா
வெள்ளையரை வெற்றி கொண்டு
வாங்கி வந்த இந்தியா
வேற்றுமையில் ஒற்றுமையாய்
வாழும் தேசம் இந்தியா
-ஆன்மீகம் இந்தியா
-தார்மீகம் இந்தியா
-யோக, தியானம், சித்த-வைத்யம்
-அள்ளித் தந்த இந்தியா
இந்தியா... எனது இந்தியா
இந்தியா... நமது இந்தியா
உழவு செய்து உணவு ஊட்டும்
அன்னை நாடு இந்தியா
உத்தமராம் சத்தியவான்
காந்தி பிறந்த இந்தியா
-அறிவியலும் இந்தியா
-பொறியியலும் இந்தியா
-தாராளமயமாதல் கொள்கை
-கொண்ட இந்தியா
இந்தியா... எனது இந்தியா
இந்தியா... நமது இந்தியா
வாழ்க தாய்நாடு!!!