ஹாஸ்டல் வாழ்க்கை
சிறையென நினைத்தேன்
சிறகை விரித்தேன், பறக்கத் துடித்தேன்
முட்டினேன், மோதினேன்- மெயின்கேட்டில்.
அவுட்டிங்க் என்னும் அத்தை வீட்டிற்கு செல்ல, ஜாமீன் கேட்டு விண்ணப்பிதேன்.
கேட்'பாஸ் என்னும் ஜாமீன் கொடுத்து, ஜாலியாகச் சுற்றித்திரிந்தேன்
போனேன் 'சத்திரம்',
எங்கும் ஜாலி, எதிலும் ஜாலி!
கடைசியில் என் பர்ஸோ காலி!
காலேஜ் முடிஞ்சு கை, கால், முகம் கழுவி
காபி குடிக்கலாமுன்னு வந்தா, டீ குடுக்கிறாஹய்யா - கொஞ்ச்ம் ஸ்னாக்ஸோ'ட.
ஒய்யாரமா போஸ் குடுத்து, ஓவரா சீன் போட்டு'வர அந்த ஃபிகருஹல சைட் அடிச்சா
ஓரமாப் போ இல்ல ஓடிப் போ'னு விரட்டு'றாரு, அந்த வாடன்-சாரு.
அப்படியே நகர்ந்து அடுத்துள்ள கேண்டீன் போயி
அஞ்சு ரூபாய் பிஸ்கட் வாங்கி அரைமணி நேரம் கடலை போட்டோம்.
ஆடி அசஞ்சு ஒரு மணிக்கு ஹாஸ்டல் போனா - அந்த வார்டன் சாரு
நிப்பாரு பாரு கை'ல வாட்சோ'ட.
புஸ்த்தகத்த எடுத்து ஸ்டடி ஹாலுக்குப் போ - இல்ல
பொழுது விடிஞ்சதும் ப்ரின்சிபால் ரூம்'முக்குப் போ, அப்டீம்'பாரு.
படிக்கக் கஸ்டமா இருக்கும், படிச்சுப்புட்டா ஈஸியா இருக்கும் - அந்த
பயமுருத்துர எஃஸாமு'ம்.
அப்பிடித்தான் நானும் பாஸானேன் - அரியர் இல்லாம!
அப்பப்ப பிரச்சன வரும், சாப்பாட்டுல - ஆனா ஒருபோதும்
இவக எங்க வயித்த காயப்போட்ட'தில்ல.
ஜிம்மு வச்சுக் குடுத்தா'க, நல்ல ப்லேய் ரூம் வச்சுக் குடுத்தாக,
போகப் போக ஒரு ஈ காக்கா'கூட அண்டுறதில்லய்யா அந்தப் பக்கம்.
பயன்படுத்துங்கப்பா ஜூனியர் பயபுள்ளை'கலே - அதப்
பயன்படுத்துங்கப்பா ஜூனியர் பயபுள்ளை'கலே!
காலங்கள் ஓடிப் போச்சு, கடைசி வருசமும் வந்தாச்சு
நாமெல்லாம் பிரியப்போற நாள்'கணக்கும் பாத்தாச்சு.
வாடா நண்பா வா, நாமெல்லாம் கூடி ஒரு பார்ட்டி வப்போமா?
பகட்டான பார்ட்டி இல்ல,
பலான பார்ட்டி இல்ல,
பேச்சுலர்'ஸ் பார்ட்டி'யும் இல்ல.
ஹாஸ்டல் டேய்'னு ஒரு பார்ட்டி - அதையும்
நடத்துவோம் ஒரு'வாட்டி
இன்னைக்கு இல்லாட்டியும் என்னைக்காவது நெனச்சுப் பாரு
இந்த ஹாஸ்டல் லைஃபப் போல வேறு ஏது!
வாழ்க வளமுடன்!!!